சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த 9-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த போது அந்த பகுதியில் உள்ள 45 வயதான மாரி என்ற நபர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு தூக்கி சென்றுள்ளார்.
அதன் பின்னர் தனது வீட்டில் வைத்து சிறுமியை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் சிறுமியை மிரட்டியுள்ளார் அவர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக அதனை வீட்டிற்கு தெரியாமல் கலைத்துள்ளார்.
கரு கலைப்பு செய்த பின்னரும் சிறுமிக்கு அடிக்கடி வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமி ஏற்கனவே கர்ப்பம் தரித்து பின்னர் கருவை கலைத்த சம்பவம் மருத்துவர்களுக்கு தெரியவந்தது.
அதன் பின்னர் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமி நடந்த சம்பவம் அனைத்தையும் பெற்றோரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் 45 வயதான மாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது புழல் சிறையில் அடைத்துள்ளனர்.