தற்பொழுது நாம் பயன்படுத்தும் லைசன்ஸ் செல்லாது என அறிவிக்க இருக்கிறார்கள் அடுத்த வருடம் ஜூலை முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஒரு நாளில் சராசரியாக 32 ஆயிரம் ட்ரைவிங் லைசன்ஸ் புதிதாகவும் புதுப்பிக்கவும் செய்கிறார்கள், அதேபோல் ஒரு நாளைக்கு 42 ஆயிரம் வாகனங்கள் பதிவு செய்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் புதுப்பிக்கவும் செய்கிறார்கள்.

இது அனைத்தையும் சரி செய்ய ஒழுங்குபடுத்துவதற்காக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் முறையை அமல்படுத்த இருக்கிறார்கள் மேலும் இந்த லைசென்ஸ் நாம் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டு போல் இருக்கும் என அறிவித்துள்ளார்கள், அதுமட்டுமில்லாமல் QR கோடு பொருத்தப்பட்டிருக்கும்.

அந்தக் கோடை ஸ்கேன் செய்தால் அந்த டிரைவிங் லைசன்ஸ் நபரின் முழு விவரமும் தெரியவரும் என அறிவித்துள்ளார்கள் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்.