Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்யை பார்த்தாலே அசிங்கமா இருக்கு.. கால்ஷீட் கிடைக்காததால் வம்புக்கு இழுத்த பழைய இயக்குனர்
வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி அதில் வெற்றி நடைபோட்டு முதல் இடத்திற்கு வருவது என்பது சாதாரண விஷயமல்ல.
27 வருடங்களாக தமிழ் சினிமாவில் போராடிய தற்போது தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்து வைத்திருப்பவர் தளபதி விஜய். விஜய்யின் ஒவ்வொரு பட வெளியீடும் திருவிழாபோல் கொண்டாடப்படுகிறது.
அப்படிப்பட்ட விஜய் ஆரம்ப காலகட்டங்களில் சில தோல்விப் படங்களைக் கொடுத்த பிறகு சரியான இயக்குனர்களால் பட்டை தீட்டப்பட்டு தற்போது விஜய் நடித்தாலே அந்த படம் பெரிய அளவு வசூல் என்ற நிலைக்கு வந்துள்ளார்.
அப்படிப்பட்ட விஜய்யை பார்த்தாலே அசிங்கமாக இருக்கிறது என ஒரு பழைய இயக்குனர் கூறியிருப்பது அனைவருக்கும் கோபத்தை வரவழைத்துள்ளது. நாகர்ஜுனா நடித்த ரட்சகன் எனும் படத்தை இயக்கியவர் பிரவீன் காந்தி.
இவர் ஒரு நடிகரும் கூட. தளபதி விஜய்யின் தமிழன் சமயத்தில் இவருக்கு விஜய்யின் கால்ஷீட் கிடைக்காமல் போய் விட்டதாம். அதனால் நீண்ட காலமாக விஜய்யின் மீது ஒரு கோபம் அவருக்கு இருந்துள்ளது.
கோலா விளம்பரத்தில் நடித்து விட்டு பிறகு கத்தி படத்தில் அதற்கான எதிர்ப்பு தெரிவித்ததை நினைத்து அசிங்கப்படுவதாக பிரவீன்காந்தி தெரிவித்திருந்தார்.
2009 சமயத்தில் கோலாவினால் எந்த பிரச்சனையும் தமிழ்நாட்டுக்கு இல்லை எனவும், அதன் பிறகுதான் அதனால் ஏற்படும் பாதிப்பை புரிந்து தளபதி விஜய் அந்த காட்சியில் நடித்ததாகவும் செய்திகள் வந்தது.
ஆனால் தனக்குப் பல வருடங்களுக்கு முன்னால் கால்ஷீட் தரவில்லை என்பதற்காக தேவையே இல்லாத விஷயத்தை பெரிதாக்கி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் பிரவீன் காந்தி.
