பழங்கால ரூபாய் நோட்டுகளுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.. அதிலும் ஒரு ரூபாய்க்கு இவ்வளவு மதிப்பா

சிலர் வித்யாசமான பண நோட்டுகளை சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். முற்காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இல்லை. ஏன் நாம் பயன்படுத்திய 500,1000 ரூபாய் நோட்டுகள் கூட செல்லாமல் போனது.

தற்போது இது போன்ற பழைய நோட்டுகள் மூலம் நாம் பல லட்சங்கள் சம்பாதிக்கலாம். பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் மூலம் 7 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். சுதந்திரம் கிடைப்பதற்கு முன் அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளுக்கு தற்போது மவுசு அதிகம்.

அந்த வகையில் இந்த ஒரு ரூபாய் நோட்டுக்கள் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கும் முன் பழமையானவை. இந்த நோட்டை எப்படி விற்பது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கும். ஓஎல்எக்ஸ் செயலி மூலம் மிக சுலபமாக ஒரு ரூபாய் நோட்டை நாம் விற்கலாம்.

ஓஎல்எக்ஸ் செயலியில் கணக்கு தொடங்கி அதில் நம்முடைய விபரங்களை தெளிவாக பதிவிட வேண்டும். அதன்பின் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை முன்பின் இருபுறமும் புகைப்படம் எடுத்த பதிவிட வேண்டும். இது போன்ற பழைய நோட்டுக்களை விற்க இணையத்தில் இன்னும் பிரத்தேக தளங்கள் உள்ளன.

தற்போது இது போன்ற பழைய நாணயங்களின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் லட்சக்கணக்கில் நாணயங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அந்த நாணயங்களுக்கு சில நிபந்தனைகளும் உண்டு.

நம் வீட்டில் ஏதோ ஒரு மூளையில் யாருக்கும் உதவாமல் இருக்கும் இந்த நாணயங்களை பயன்படுத்தி உடனே சம்பாதியுங்கள். இதில் ஒரு ரூபாய் மட்டும் அல்லாமல் நாம் அரிதாக பார்க்கப்படும் பழைய நோட்டுக்கள் எல்லாமே வியாபாரமாகிறது.