Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu
காலம் போன காலத்தில் பிரபல நடிகரின் மீது வந்த காதல்.. திடீரென ரொமான்ஸில் ஈடுபடும் நாயகி
தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வருபவர் தான் அந்த நாயகி. சமீபத்தில் விரல்வித்தை நடிகருடன் மீண்டும் காதலில் விழுந்ததாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அது அவர் இல்லையாம். நீண்ட நாட்களாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் அந்த ஸ்மார்ட் நடிகர். தற்போது தெலுங்கில் வாரிசு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகையின் முன்னால் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ரோடு சிக்னலை வைத்து வெளியான திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ஓரளவு வரவேற்பும் பெரும் நாயகனாக மாறியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஹிட் கிடைத்துள்ளதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ஒரு ஹாரர் படத்தின் மூலம் ஜோடி சேர்ந்து நடித்தனர் அந்த மூத்த ஜோடிகள். பார்ப்பதற்கு இளம் வயதை போன்று இருந்தாலும் இருவருக்கும் வயது 35 தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்தப் படத்தின் போது இருவருக்கும் சில கிசுகிசுக்கள் ஏற்பட்டன. இருந்தாலும் அந்த நாயகி அப்போது அக்கட தேசத்தில் உயரமான வில்லன் நடிகருடன் காதலில் இருந்தார்.
சமீபத்தில் அந்த உயரமான நடிகருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதால் வண்டியை வேறு ஒரு நடிகர் பக்கம் திருப்பி விட்டாராம் அந்த நாயகி. அந்த நடிகரும் நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் பழைய காதலியை நினைத்து கொண்டே இருக்கிறார்.
நான் அவரை மறக்க வைக்கிறேன் என உள்ளே நுழைந்து தற்போது மொத்த பார்வையும் இந்த நாயகி மீது விழும்படி செய்துவிட்டாராம். சத்தமே இல்லாமல் இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வருகிறார்களாம். விரைவில் திருமண அறிவிப்பு வரும் என்கிறது அவர்களது வட்டாரம்.
