கிரிக்கெட் வீரரால் கைவிடப்பட்ட சர்ச்சை நடிகை.. செகண்ட் இன்னிங்க்ஸ்க்கு தயார்

actress
actress

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் அந்த நடிகை. அதன்பிறகு பிரமாண்ட இயக்குனர் திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்தார். முதல் படமே அவருக்கு மிகப்பெரிய புகழையும், வெற்றியையும் தேடித் தந்தது.

அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் பட வெற்றிக்கு பிறகு தமிழில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த அந்த நடிகை, திருமணமான நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருந்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்த சோகத்தில் தமிழ் சினிமாவை விட்டு வேறு மொழி பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். அங்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆனால் அந்தக் காதலும் நிலைக்காத விரக்தியில் நடிகை அரசியல், ஆன்மிகம் என்று தன் கவனத்தை திசை திருப்பினார். தற்போது அரசியலில் முக்கிய நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த நடிகை.

மீண்டும் அவர் தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என்று பலரும் ஆவலாக காத்திருந்த நிலையில் நடிகை தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார். முக்கிய நடிகரின் திரைப்படத்தில் அந்த நடிகை ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

சினிமாவில் பல சர்ச்சைகளை சந்தித்த நடிகையின் மறுபிரவேசம் எந்த மாதிரி இருக்கும் என்பதை நாம் பொருத்திருந்து பார்க்கலாம். அந்த நடிகையின் தங்கையும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Advertisement Amazon Prime Banner