fbpx
Connect with us

Cinemapettai

சூப்பர் ஸ்டார் மருமகன் என்றால் அதை செய்துவிடுவாரா? ஒரு அளவுக்குத்தான் என தனுசை எச்சரித்த பிரபல நடிகர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் மருமகன் என்றால் அதை செய்துவிடுவாரா? ஒரு அளவுக்குத்தான் என தனுசை எச்சரித்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் என்றால் தலைவர் சூப்பர் ஸ்டார் மட்டுமே. ஆயிரம் பேர் அந்த இடத்திற்கு போட்டி போட்டாலும் ரஜினி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார். ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டவர் நடிகர் தனுஷ்.

சமீபகாலமாக தனுஷ் நடிக்கும் படங்கள் இந்திய சினிமா அளவுக்கு பேசப்பட்டு வருகின்றன. ஹிந்தி படங்களிலும் நேரடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷ் மாமனாராகிய ரஜினிகாந்த் நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண்.

ரஜினிகாந்துடன் லட்சுமி, சரிதா, மேனகா என பலரும் நடித்திருந்தனர். இரட்டை வேடத்தில் வித்தியாசமாக கலக்கி இருந்தார் ரஜினி. இந்த படத்திற்கு கதை எழுதியவர்கள் விசு மற்றும் பாலச்சந்தர். எஸ்பி முத்துராமன் இயக்கிய நெற்றிக்கண் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதனைக் கேள்விப்பட்ட விசு, நெற்றிக்கண் படத்திற்கு கதை எழுதியது நான், என்னிடம் கேட்காமல் எப்படி அவரால் ரீமேக் செய்ய முடியும். ரஜினியின் மருமகன் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என தனுஷின் மீது கோபப்பட்டு உள்ளார்.

அதையும் மீறி தனுஷ் அதை செய்தால் நான் கோர்ட்டுக்கு போவதை தவிர வேறு வழியில்லை என எச்சரித்துள்ளார் விசு. இதனால் தற்போது தனுஷ் தலைகால் புரியாமல் குழம்பிப் போயுள்ளாராம். விசுவின் கதைக்கு அவரிடமே ரைட்ஸ் வாங்கி படம் எடுக்கலாமே, எதுக்கு இந்த வேலை தனுஷ் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top