பெண் சாப்ட்வேர் இன்ஜினியரை பலாத்காரம் செய்ய முயன்ற ஓலா டிரைவர்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்

பெங்களூரில் ஏற்கனவே பிரதீபா போன்ற பெண் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் கார் டிரைவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அந்த சம்பவங்கள் எல்லாம் இன்னும் பசுமையாகவே உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் பெண் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் அஸ்வினி பங்கேரா என்பவர் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ஓலா காரை புக் செய்தார்.

அதன்படி கார் டிரைவர் ரவிக்குமார் 2 மணிக்கு வந்தார். வந்தவர் அஸ்வினியை விழுங்கி விடுவது போல ஏற இறங்க பார்த்தார். அப்போதே அஸ்வினிக்கு ஏதோ விபரீதம் நிகழ போகிறது என உணர்ந்தார். இருந்தாலும் மனதை திடப்படுத்தி கொண்டு காரில் ஏறினார். அவரை ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்த ரவிக்குமார், நள்ளிரவு நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினார்.

இதனால் பயந்து காரில் நடுங்கியபடி இருந்த அஸ்வினியை கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கு அஸ்வினி  எதிர்த்து போராடினார். அந்த நேரத்தில் அந்த வழியாக நான்கைந்து கார்கள் வரவும் டிரைவர் பயந்து போய் பின்வாங்கி உள்ளார்.

இது தொடர்பாக அஸ்வினி பொம்மனஹள்ளி போலீசில் புகார் செய்தார். டிரைவர் ரவிக்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments

comments

More Cinema News: