Connect with us

Cinemapettai

ola

India | இந்தியா

இனி ஒரு OLA கார் கூட ஓடாது.. முதல்வர் அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் மக்கள்

ஓலா: 266 பைக், டாக்ஸி கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் உத்தரவை மீறி நிறுவனம் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரில் ஓலா நிறுவனம் கார் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மொபைல் ஆப்பின் மூலம் இயங்கி வரும் ஓலா கார் சேவை அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பயன்படும் வகையில் இருந்தது.

ஆனால் ஓலா நிறுவனம் அனுமதி பெறாமல் பைக்,டாக்ஸிகள் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது. ஓலா வண்டி ஓட்டுநர்கள் நிபந்தனைகளை மீறி வண்டிகளை இயக்க வருவதால் ஆறு மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாநில முதல்வர் H.D.குமாரசுவாமி புதிய டாக்ஸி சேவைக்கான அப்ளிகேஷன் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.  இதற்கு HDK cabs டாக்சி சேவை மாநிலத்தில் அமல்படுத்த உள்ளதால் ஓலா கேபின் சேவைகளை நிறுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மாநில அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை ஓலா கேப்ஸ் டாக்ஸி ஓட்டுனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிவிப்பின் நகல் கிடைத்த மூன்று நாட்களுக்குள் ஓலா நிறுவனம் அதற்கான நகலைஅரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top