fbpx
Connect with us

Cinemapettai

ஆஹா! ஓஹோ! என பாராட்டிய ஓ மை கடவுளே படம் இந்த கொரியன் வெப்சீரிஸ் காப்பியா.. சாயம் வெளுத்து போச்சு மக்கா!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆஹா! ஓஹோ! என பாராட்டிய ஓ மை கடவுளே படம் இந்த கொரியன் வெப்சீரிஸ் காப்பியா.. சாயம் வெளுத்து போச்சு மக்கா!

2020 ஆம் ஆண்டு காதலர் தின சிறப்பாக வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அனைவரையும் கவர்ந்தது.

நண்பர்களுக்குள் காதல் திருமணம் நடைபெற்றால் அந்த திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

ஏன், இந்த படத்தை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கூட தனது ட்விட்டர் பக்கத்தில் ஆகா, ஓகோ என்று புகழ்ந்து பாராட்டி தள்ளினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு அருமையான தமிழ் படமாக இருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு மொழியில் இருந்து காப்பி தான் அடித்திருக்க வேண்டும் என நான்கு பேர் கொண்ட குழு ஒன்று அதனைத் தேடிக் கண்டுபிடித்து விட்டனர்.

கொரிய மொழியில் 2012 ஆம் ஆண்டு வெளியான ஆபரேஷன் புரோபோசல் எனும் வெப்சீரிஸிலிருந்து இந்த படம் காப்பி அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

கொரியன் படத்தை காப்பி அடித்தால் தான் கண்டுபிடிப்பீர்கள் என கொரியன் வெப்சீரிஸ் ஒன்றை காப்பியடித்து முழு படத்தையும் எடுத்து வைத்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

இதுவரை ஆஹா, ஓஹோ என பாராட்டி வந்த அதே வாய்தான் தற்போது நாறவாயாக மாறி அந்த இயக்குனரை கிழி கிழி என சமூக வலைதளங்களில் கழித்து வருகின்றனர்.

operation-proposal-webseries

operation-proposal-webseries

கொரியன் படங்களை பார்த்து தமிழ் படங்கள் எடுப்பது இது ஒன்றும் புதிதல்ல என விஷயம் தெரிந்தவர்கள் ரசிகர்களுக்கு சமாதானம் கூறி வருகின்றனர். இதுவே அட்லீ செய்திருந்தால் பிரித்து மேய்ந்திருப்பார்கள்!

Continue Reading
To Top