தமிழர்கள் நாம் மிகவும் நாகரீகமானவர்கள். கருணை வடிவங்கள். கொடை வள்ளல்கள். வந்தாரை வாழவைக்கும் தேவரின் தெய்வங்கள்.

உதவிகரம் நீட்டினால் வாழவைக்கும் தெய்வங்கள். எனவே கீழ் கண்ட செய்திகளை படித்து அதை அப்படியே கடைப் பிடியுங்கள்..!

இப்படி ஒரு செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது. என்னத்த சொல்றது..?

இன்றுடன்  டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 105 வருடங்கள் நிறைவடைந்தது.

அதில் மூழ்கி இறந்த 1503 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மாலை உங்களுடைய மொபைலை ஒரு 5 நிமிடம் தண்ணீரில் முக்கி எடுக்கவும்.

இப்படி வளைதளங்களில் தேவையற்ற செய்திகளும் பரவிக்கொண்டு இருக்கிறது. வளை தளங்களை பயன்படுத்துவோர் இவைகளை புறம் தள்ளி நல்லவைகளை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இளம் பெண்களை குறிவைத்து அல்லது இளம் சிறுவர்களை குறி வைத்து பல தவறான பகிர்வுகள் கூட வலம் வருகிறது. இவைகளை பெற்றோரும் கவனித்து அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

அதிலும் சமீப காலங்களில் இளம் பெண்களை குறி வைத்து சிலர் ஆபாச காட்சிகள் அல்லது செய்திகளை அனுப்பி சீரழிக்க நினைக்கின்றனர். சமீபத்தில் ராசிபுரத்தில் நடந்த சம்பவம் நல்ல உதாரணம். அதை செய்தது ஒரு போலீஸ்காரர் என்பது மேலும் நம்மை அதிர வைக்கிறது.

ஆகவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணிப்பதுடன் தவறான வழிகளுக்கு சென்றுவிடாதபடி அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here