வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எப்போ நடந்துச்சு, ஓ மை காட், ஆடி போன ரஜினி.. பாவம் தலைவருக்கு ஒண்ணுமே தெரியல!

Rajinikanth: என்னது சிவாஜி செத்துட்டாரா என்ற ஒரு ஃபேமஸ் டயலாக் இருக்கிறது. அதாவது ரொம்ப பழைய விஷயத்தை புதிதாக கேட்பது போல் கேட்பவர்களுக்கு இதை கிண்டல் பண்ண உபயோகிப்பது உண்டு.

அப்படி ஒரு விஷயத்தை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்திருக்கிறார்.

ரஜினி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூருக்கு செல்ல விமான நிலையம் வந்திருக்கிறார்.

ஆடி போன ரஜினி

அப்போது அவரிடம் திருவண்ணாமலையில் நிலச்சரிவு மற்றும் ஏழு பேர் உயிரிழந்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது ரஜினிகாந்த் ரொம்பவும் மகிழ்ச்சியாக அப்படியா எப்ப நடந்தது, ஓ மை காட் என சொல்லி இருக்கிறார்.

மேலும் இறந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலையும் சொல்லி இருக்கிறார். திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி உயிரிழந்தார்கள்.

கிட்டத்தட்ட எட்டு நாட்களை கடந்த நிலையில் ரஜினிக்கு இந்த விஷயம் தெரியாதது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

Trending News