புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கடவுளே அஜித்தே! குட் பேட் அக்லி படத்துக்குப் பின் அஜித் பிளான் என்ன? கேட்கவே செமயா இருக்கே!

அஜித் குமார் குட் பேட் அக்லி படத்துக்குப் பின் என்ன செய்யப் போகிறார் என்ற தகவல் வெளியாகிறது.
சினிமாவில் உச்ச நடிகராக இருந்தபோதும் தன் இலட்சியத்தின் மீது தாகமாக இருப்பவர் அஜித்குமார்.

அதனால் தான் உச்ச நடிகராக கோலோட்சிக் கொண்டிருக்கும் போதே எதைப் பற்றியும் கவலைப்படமால், பைக் டூர், உலகச் சுற்றுப் பயணம், கார் ரேஸ் என எதிலும் ஆர்வமுடன் செயல்பட்டு தன்னை ஆக்டிவ்வாக வைத்துக் கொள்கிறார்.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் அவர் நடித்து வரும் நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. என்ன காரணத்தினாலோ இப்படம் அறிவிக்கப்பட்டு, ஓராண்டுகள் ஆகியும் இன்னும் ரிலீசாகவில்லை. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான பின், இப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பானது என தகவல் வெளியானது. அதன்பிறகு வேறெந்த அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கடவுளே அஜித்தே என கூக்குரல் எழுப்பி இதைப் பற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படமும் பிரமாண்டமாக உருவாகி வரும் நிலையில், இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் மீதும் எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

விடாமுயற்சி படவேலைகள் இன்னும் நடந்து வரும் நிலையில், குட் பேட் அக்லி படப்பணிகள் அதைக்காட்டிலும் வேகமாக நடந்து வருகிறது. எனவே இரண்டு படங்களில் எந்தப் படம் முதலில் தியேட்டரில் ரிலீஸாகும் என கேள்வி எழுந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்துக்குப் பின் என்ன செய்யப் போகிறார் அஜித்?

அதன்படி, தற்போது குட் பேட் அக்லி பட ஷூட்டிங் பல்கேரியாவில் நடந்து வருகிறது. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் நாளை முடிவடையும் நிலையில், வரும் நவம்பர் 27 ஆம் தேதி முதல் அவர் கார் ரேஸில் கவனம் செலுத்தப்போகிறார் என அஜித்தின் வீனஸ் மோட்டார்சைக்கில் டூர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சினிமாவில் அஜித் தன் கால்ஷீட், டப்பிங் என எல்லாவற்றையும் சரியாக முடித்துக் கொடுத்து, தன் வேலைகளிலும் கவனமாகச் செயல்பட்டு வந்தாலும் ஏன் இன்னும் விடாமுயற்சி ரிலீஸ் ஆவதிலும், இப்பட அப்டேட் வெளியிடுவதிலும் சுணக்கம் ஏற்படுகிறது என சினிமா விமர்சகர்களும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது

- Advertisement -

Trending News