புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இரண்டு நாட்களில் கங்குவாவின் அதிகாரப்பூர்வ வசூல்.. சூர்யா, ஞானவேல் தலை தப்புமா.?

Kanguva Collection : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவான கங்குவா படம் சமீபத்தில் வெளியானது. 13 மொழிகளில் வெளியான இப்படம் கிட்டத்தட்ட 11,500 திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு ஓவர் இறைச்சலாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் படத்தின் மேக்கிங் சரியில்லை என்று பலரும் கூறி வந்தனர். இந்த சூழலில் நடிகை ஜோதிகா என்று தனது சமூக வலைத்தளத்தில் கங்குவா படத்தை பற்றி சில விஷயங்களை அறிவித்திருந்தார்.

அதாவது படத்தில் இரைச்சல் இருப்பதை ஒத்துக்கொள்கிறோம். மேலும் 30 நிமிட காட்சிகள் மட்டுமே நன்றாக அமையவில்லை. ஆனால் வேண்டுமென்றே கங்குவா படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பலர் பரப்பி வருவதாக கூறியிருந்தார்.

கங்குவா இரண்டு நாட்களில் செய்த அதிகாரப்பூர்வ கலெக்சன்

kanguva-collection
kanguva-collection

இந்த சூழலில் கங்குவா படத்தில் வசூலை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. முதல் நாள் கிட்டத்தட்ட 58 கோடி வசூலை கங்குவா படம் செய்திருந்தது. இரண்டாம் நாளில் 30 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆகையால் இரண்டு நாட்களில் 89.32 கோடி வசூல் செய்துள்ளதாம்.

கங்குவா படம் மெகா பிளாக்பஸ்டர் என்று இந்த வசூலை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். ஆனாலும் நெகட்டிவ் விமர்சனத்தால் படம் விடுமுறை நாட்களாக இருந்தாலும் வசூல் பெறுமா என்பது சந்தேகம்தான்.

அதோடு இப்போது பருவ மழை தொடங்கி இருப்பதால் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனாலும் கங்குவா படத்தின் வசூல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதோடு இப்போதும் அமரன் படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

- Advertisement -

Trending News