கொரானா பாதிப்பால் பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய மாதத் தவணை(EMI), வீட்டு வாடகை போன்றவற்றை குறைந்தது மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டாம் என மத்திய அரசு அறிவித்தது.
தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. பலருக்கும் வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மாதத் தவணைகளை மூன்று மாதங்கள் கழித்து கட்டிக் கொள்ளலாம் என அறிக்கை விட்டது.
ஆனால் இதுவரை அது நடைமுறையில் இருந்ததா என்றால் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து மாதத் தவணையை வசூல் செய்துதான் வருகிறார்கள்.
இது எல்லாம் அரசின் கவனத்திற்கு செல்கிறதா என்பது தெரியவில்லை. இருந்தாலும் பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஆர்பிஐ நிறுவனம் எஸ்பிஐ அறிக்கையில் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணைகள் எதுவும் செலுத்த தேவையில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று மாத மாதத் தவணைகளை பின்னால் வரும் நாட்களில் தவணைத் தொகை செலுத்துவதில் மாதங்கள் நீட்டிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் அதற்காக ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளனர்.
தற்போது அதிகாரப்பூர்வமாக ரிசர்வ் வங்கி ஆளுநர் இந்த தகவலை அறிவித்துள்ளார். மேலும் மீறி டார்ச்சர் பண்ணி பணம் கேட்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.