இன்று தலைமைச் செயலகத்திற்கு செல்லும் முதல்வர் ஓ.பி.எஸ் பல அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலில் ஜெ., மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஜெயலலிதா எப்படி தனக்கு எதிராக செயல்பட்ட அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்வாரோ, அதேபோல பன்னீர் செல்வமும் களத்தில் இறங்கியுள்ளார்.

சசிகலாவுக்கு, ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை வேறு இடங்களுக்கு மாற்றி உத்தரவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, உளவுத்துறை மூலம் ஸ்பெஷல் லிஸ்ட் தயாராகியுள்ளதாம். லிஸ்டில் முதல் பெயர் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்?

மேலும், சில நிர்வாக துறையை சார்ந்த அதிகாரிகளையும் அவர் மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.