புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

அக்டோபரை அலங்கரிக்க வரும் 5 ஸ்டார்களின் படம்.. வசூல் வேட்டைக்கு தயாராகும் வேட்டையன்

October Month Release Movies: அக்டோபர் மாதம் ஆயுத பூஜை, தீபாவளி என பண்டிகை மாதமாக இருக்கிறது. பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் பண்டிகைக்கு ரிலீஸ் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் அக்டோபர் மாதம் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐந்து படங்கள் வெளியாகிறது.

வணங்கான்

பாலா இயக்கத்தில் ஆரம்பத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த படம் தான் வணங்கான். இப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கிறார். மிஷ்கின், சமுத்திரகனி போன்ற பிரபலங்களும் இப்படத்தில் நடித்துள்ள நிலையில் அக்டோபர் 27 திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

பிரதர்

எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது பிரதர். இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்கான பிரமோஷன் வேளையில் இப்போது ஜெயம் ரவி இறங்கி இருக்கிறார்.

பிளடி பக்கர்

தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார் கவின். அந்த வகையில் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நெல்சன் தயாரிப்பில் இப்போது கவின் நடித்துள்ள படம் தான் பிளடி பக்கர். இந்தப் படம் ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு போட்டியாக அக்டோபர் 31 வெளியாக உள்ளது.

அமரன்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் அமரன். கமல் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர். இப்படமும் அக்டோபர் 31 தீபாவளிக்கு வெளியாகிறது.

வேட்டையன்

டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினி, அமிதாபச்சன், பகத் பாஸில் போன்ற பெரும் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் தான் வேட்டையன். இப்படம் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

வசூல் வேட்டைக்கு தயாராகும் வேட்டையன்

- Advertisement -spot_img

Trending News