Tamil Cinema News | சினிமா செய்திகள்
பண மழையில் கோலிவுட்.. தொடர்ந்து கோடிகளை குவித்து வரும் திரைப்படங்கள்
கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது 200 படங்களுக்கு மேல் ரிலீஸாவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் அதில் 15% படங்கள் கூட முழுமையாக வெற்றி பெற்று லாபத்தை தருவதில்லை. அதேபோல் இந்த வருடமும் ஏகப்பட்ட படங்கள் திரையரங்குகளுக்கு வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்டன.
இந்நிலையில் கடைசி 30 நாள் இடைவெளியில் நான்கு படங்கள் மெகா ஹிட்டாகி உள்ளது. அதைப்போல் அனைத்து திரையரங்குகளுக்கும் நல்ல லாபத்தையும் கொடுத்துள்ளது.
அது என்னென்ன படங்கள் என்றால், கடந்த செப்டம்பர் 27-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது.
அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சக ரீதியாகவும் பெரும் லாபத்தை சம்பாதித்துக் கொடுத்தது.
தற்போது தீபாவளியை முன்னிட்டு வெளியான தளபதியின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று போட்டி போட்டு வசூலித்து வருகின்றனர். இதில் பிகில் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
அதேபோல் பொங்கலுக்கு ரிலீசான பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களும் நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
