சமுத்திரக்கனி இன்று சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஓர் ரோல் மாடல். தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர்.

இவர் சமீபத்தில் ஒரு யு-டியூப் சேனலில் பேட்டி அளிக்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து பேசியுள்ளார்.

இதில் 10-ம் வகுப்பு முடிந்தவுடனே அப்பா பாக்கெட்டில் இருந்து 78 ரூபாய் பணத்துடன் சென்னை ஓடி வந்தேன், இரண்டு நாள் கூட தக்குப்பிடிக்க முடியவில்லை.

நடுரோட்டில் படுத்து உறங்கினேன், அதை தொடர்ந்து இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு விழுப்புரம் வரை வந்துவிட்டேன்.

ஆனால், அதை தொடர்ந்து செல்ல பணமில்லை, அங்கேயே ஒரு ஹோட்டலில் 5 நாட்கள் வேலைப்பார்த்துவிட்டு ரூ 25 சம்பாதித்து ஊருக்கு சென்றேன்.

பிறகு 12-ம் வகுப்பு, கல்லூரியில் ஒவ்வொரு செமஸ்டர் என சென்னை வந்துக்கொண்டே இருந்தேன்’ என மிக உருக்கமாக பேசியுள்ளார்.