மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்.. தலைக்கு வந்த பிரச்சனை தலைப்பாகையுடன் போகும்

நம்முடைய முன்னோர்கள் எப்போதும் நம்முடைய நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அம்மாவாசையில் நீத்தார் கடன் எனப்படும் அம்மாவாசை திதி அன்று நம் முறையாக முன்னோர்களை வழிபட்டு அவர்களின் பசியை போக்க வேண்டும். இல்லாவிட்டில் பசியோடும் வருத்தத்துடனும் பிதுர்லோகம் சென்று விடுவார்கள். இது பித்ரு கடனாக மாறும் முன்னோர்களுக்கான சடங்குகளை செய்யாவிட்டால் பித்ரு தோஷம் ஏற்படும்.

அதாவது குடும்பத்தில் இறந்தவர்களுக்கு அவர்களின் இறந்த தேதியில் நீத்தாருக்கான சடங்குகளை செய்யாவிட்டால் புரட்டாசி மாதத்தில் வரும் மஹலாய சமயத்தில் பித்ரு பக்ஷத்தில் அவற்றை செய்து விடலாம். அப்படி சரியாக பித்ருக்களுக்கு திதி கொடுக்கவில்லை என்றால் அது அந்த குடும்பத்தையும் வாரிசுகளையும் பாதிக்கும் என்று சொல்வது வழக்கம்.

ஒரு குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக முன்னோர்களுக்கு சரியாக திதி கொடுத்து வந்தால் அந்த குடும்பத்திற்கு பித்ரு தோஷம் என்பது இருக்கவே இருக்காது என்பது ஐதீகம். அத்துடன் அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக செழித்து வளர்ந்து கொண்டே வரும். ஏனென்றால் முன்னோர்களின் ஆசிர்வாதம் இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவை தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகும் என்று சொல்வார்கள்.

அது மட்டுமில்லாமல் முன்னோர்களுக்கு சரியான முறையில் திதி கொடுத்து வந்தால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எடுத்த காரியம் அனைத்தும் தடையின்றி சுமூகமாக முடிவடையும். அதாவது குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் அதை தடுக்கும் பொறுப்பாக முன்னாடி வந்து நிற்பது அந்த குடும்பத்தின் குலதெய்வம் மற்றும் பித்ருக்களின் ஆசிர்வாதம் தான்.

எனவே குலதெய்வ பிரார்த்தனை மற்றும் பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும் நிச்சயமாக நம் பெற வேண்டும். இவர்கள் கடவுள் இல்லை என்றாலும் தனது சந்ததிகள் மீது அதிக அக்கறை கொண்டவர்கள். அதனால் சந்ததிற்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏதாவது ஒரு வழியில் நிச்சயம் ஓடோடி வந்து உதவுவார்கள்.

இப்படி இருக்கும் பட்சத்தில் பித்ருக்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை தவற விடக்கூடாது. வாழ்க்கையில் முன்னேற்றமும், குடும்பத்தின் பரம்பரை விருத்தியடைய வேண்டுமென்றால் தவறாமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வர வேண்டும்.

அப்படி செய்யாமல் போய்விட்டால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்காமல் குடும்பத்தில் வளர்ச்சி என்பது இருக்காது. உறவுகள் மூலமாகவும் நம் தர்ம சங்கடங்களை சந்தித்து பிரச்சனைகளையும் தோல்விகளையும் பார்க்கும் படியான சூழ்நிலை அமைந்து விடும். அதனால் எவ்வளவு தான் பணம் இருந்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்க வேண்டும் என்றால் பித்ருக்களின் ஆசிர்வாதம் நிச்சயம் வேண்டும்.

அதனால் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மகாலயா சமயத்தில் மூதாதையர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும். அப்படி இந்த வருடம் திதி கொடுக்க உகந்த நாட்களாக செப்டம்பர் 17 முதல் தொடங்கி அடுத்த மாதம் 15 ஆம் நாட்களுக்குள் அதாவது அக்டோபர் 2ம் தேதி வரை தொடரும் பித்ரு பக்ஷ காலத்தில் மூதாதையர்களுக்கான கடமைகளை செய்து பித்ருக்களை திருப்தி செய்யலாம்.

- Advertisement -spot_img

Trending News