Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய ஓ. பண்ணீர்செல்வம். அட இஞ்யார்ரா ..
தல அஜித் படம் fdfs என்றாலே திரையரங்கில் சென்று திருவிழாபோல கொண்டாடுவார்கள் ரசிகர்கள். நேற்று அவரின் பிறந்தநாள் ஆயிற்றே, சும்மாவா விடுவார்கள். பொதுசேவை தொடங்கி கேக், போஸ்டர், அன்னதானம் என அசத்தினார் நேற்று. அதே போல மனிதர் எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் கிடையாது, என்றாலும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் தல அஜித்.
சாமானியன் ஒரு நடிகருக்கு ரசிகன் ஆக இருப்பது ஆச்சர்யம் பெரிதும் அல்ல, ஆனால் சினிமா செலிபிரிட்டிகளே பலர் இவரின் ரசிகன் / ரசிகை என சொல்வதில் பெருமை பட்டுக்கொள்கின்றனர்.
இத்தகைய சூழலில் அரசியல் வாதிகளும் இவருக்கு வாழ்த்தை தெரிவிக்க தவறவில்லை.
எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற திரைப்பட நடிகர் திரு.அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! #HBDAjithkumar
— O Panneerselvam (@OfficeOfOPS) May 1, 2019
OPS அவர்களின் இந்த ஸ்டேட்டஸ் 6500 ரி ட்வீட் மற்றும் 17000 லைக்குகள் குவித்துள்ளது.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
