விட்டுப் போய்விடுமோ என்று பயப்படும் பொருளுக்குதான் மதிப்பும் கிராக்கியும் அதிகம். இது காதலில் அதிகம் நடக்கக்கூடியது. சர்ச்சை நடிகை – இளம் இயக்குநர் காதலிலும் இதுதான் நடக்கிறதாம்.

நடிகை இப்போது ஒரு தெலுங்கு படத்தின் ஷூட்டிங்குக்காக வெளிநாடு பறந்திருக்கிறார். எப்போதும் நடிகையுடனேயே ஒட்டிக்கொண்டு சுற்றும் இயக்குநருக்கு இந்த ட்ரிப்பில் இடம் இல்லையாம். இங்கு, தான் இயக்கும் பட வேலைகள் இருப்பதைக் காரணம் காட்டி அவாய்ட் செய்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கும் புகழ் நடிகைக்கும் இயக்குநருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி உருவாகி இருப்பதை அரசல் புரசலாகக் கேள்விபட்ட நடிகை வெளிநாடு கிளம்பும் முன் இங்கே இருவரையும் கண்காணிக்க சில அசிஸ்டெண்ட் டைரக்டர்களை ஸ்பைகளாக நியமித்துவிட்டுதான் சென்றிருக்கிறாராம்.

காலையும் மாலையும் தகவல் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் ஸ்பைகள்.