17 பிரம்மாண்ட இந்திய படங்களை வாங்கி மாஸாக வரும் நெட்ப்ளிக்ஸ்.. அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் அமேசான்

நாளுக்கு நாள் தியேட்டர்கள் இல்லாததால் OTT தளங்களின் ஆதிக்கம் மற்ற நாடுகளைப் போல இந்தியாவிலும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் பிரபலமாக இருக்கும் அமேசான் நிறுவனத்தை அதிர்ச்சி ஆக்கியுள்ளது நெட்ப்ளிக்ஸ் இந்திய நிறுவனம்.

இந்தியாவில் அதிகமான OTT வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிறுவனமாக இருந்த அமேசான் பின்னுக்கு தள்ள நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் புதிய ஐடியாவை கையில் எடுத்துள்ளது. இந்த வகையில் 17 இந்திய படங்களை ஒரே சமயத்தில் வாங்கி ஒவ்வொரு வாரமும் வெளியிட முடிவு செய்துள்ளது.

இதனால் அமேசான் நிறுவனம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. மேற்கொண்டு தங்களது வாடிக்கையாளர்களை இழக்கவும் வாய்ப்பு உள்ளது என அச்சப்படுகிறார்கள்.

மணி ஹெய்ஸ்ட் என்ற வெப்சீரிஸ் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான OTT நிறுவனமாக மாறியது நெட்ப்ளிக்ஸ். இதற்குக் கிடைத்த வரவேற்பால் தற்போது இந்தியாவில் தங்களுடைய ஆதிக்கத்தை முழுமையாகச் செலுத்த முடிவு எடுத்துள்ளனர்.

அதன் முதல் கட்டமாக ஹிந்தியில் வெளிவராமல் தடுமாறிக் கொண்டிருக்கும் 17 படங்களை ஒரே மூச்சில் வழங்கியுள்ளது அந்த நிறுவனம். சில தமிழ் படங்களுக்கும் வலைவீசி உள்ளது நெட்ப்ளிக்ஸ்.

முதல்கட்டமாக கார்கில் கேர்ள், டார்பாஸ், டாலி கிட்டி, ராட் அகிலே ஹாய், லூடோ, கிளாஸ் ஆப் 83, கிண்ணி வெட் சன்னி, ஏ சூட்டபில் பாய், மிஸ் மேட்ச்டு, ஏகே vs ஏகே, சீரியஸ் மென், டிரிபங்கா, காளி குகி, பாம்பே ரோஸ், பாக் வெனி பாக், பாம்பே பிகம்ஸ், மசபா மசபா போன்ற படங்களை வாங்கியுள்ளது.