நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வந்தது. இதனால் இவருக்கு வசூல் ராணி போன்ற பெயர்களும் வந்தது.

வெற்றி ராணி என்ற பெயர் வந்ததனாலேயோ தெரியவில்லை அவர் நடிப்பில் கடைசியாக வெளியான டோரா படம் ஓடவே இல்லை. விநியோகஸ்தர்கள் சில பேர் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தற்போது சமூகத்தின் முக்கியமான பிரச்சனையான விவசாயத்தை மையப்படுத்தி அறம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திற்கு சிக்கல்?

இந்த படத்தை வாங்குவதற்கு தற்போது யாரும் முன்வரவில்லையாம். ஏனெனில் டோரா பட தோல்வி இப்படத்திற்கு மோசமான வரவேற்பை கொடுப்பதாக கூறப்படுகிறது.