fbpx
Connect with us

Cinemapettai

லோகேஷ் கனகராஜிற்கு கொட்டிக் கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லோகேஷ் கனகராஜிற்கு கொட்டிக் கொடுக்க தயாராகும் தயாரிப்பாளர்கள்.. தலை சுற்ற வைக்கும் சம்பளம்

ஒரு விஷயத்திற்கு உண்மையாக இருந்தால் அது நமக்கு பல நன்மைகளைச் செய்யும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். வங்கியில் வேலை செய்தவர், தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர்.

மாநகரம் படத்தில் தன்னுடைய முத்திரையை பதித்த லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கிய கைதி படத்தின் மூலம் கதையுடன் கமர்ஷியல் அம்சத்தை சேர்த்து வசூல் ரீதியாக பெரிய வெற்றியை கொடுக்க முடியும் என நிரூபித்துக் காட்டியவர். கைதி படம் 100 கோடி வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் கைதி படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சம்பளம் வெறும் 20 முதல் 30 லட்சம் மட்டும்தான். அதனையடுத்து தமிழ் சினிமாவின் தற்போதைய நம்பர் 1 நாயகன் விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் சுமார் 1.5 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

மாஸ்டர் படத்தின் எதிர்ப்பார்ப்பும் வியாபாரமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக நடந்ததால் தயாரிப்பாளர்கள் அவருக்கு மேலும் ஒரு மடங்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்துள்ளனர். அதனால் தான் ஆசைப்பட்ட ரேஞ்ச் ரோவர் காரை சுமார் ஒரு கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

வெறும் 20 லட்சம் கொடுத்து கைதி படத்தை எடுத்த தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தற்போது கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க லோகேஷ் கனகராஜ்க்கு சுமார் 3 முதல் 5 கோடி வரை சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்திற்கு வளர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூட சொல்லலாம். இன்னும் ஒரே வருடத்தில் தமிழ் சினிமாவில் நம்பர்-1 இயக்குனராக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் லோகேஷ் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் செலவு எதையும் வைக்காததே அவரின் மேல் நம்பிக்கை உருவாக காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

மாஸ்டர் படத்தில் நடிகர்கள் சம்பளம் போக படம் எடுக்க தேவையான பட்ஜெட் வெறும் 50 கோடி மட்டும்தான் என்றால் ஆச்சரியமாக உள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top