Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவை வச்சு செய்த இந்த வாரப் படங்கள்.. தெறித்து ஓடிய ரசிகர்கள்

action-sangatamilan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவை வச்சு செய்த இந்த வாரப் படங்கள்.. தெறித்து ஓடிய ரசிகர்கள்

2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பொன்னான ஆண்டாக கருதப்படுகிறது. காரணம் இந்த வருடம் பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் ரிலீசாகி வசூலில் சக்கை போடு போட்டது.

அந்தவகையில் ரஜினிக்கு ஒரு படம், அஜித்துக்கு 2 படம், சூர்யாவுக்கு 2 படம், விஜய்க்கு ஒரு படம் என இந்த வருடம் செழுமையாகவே இருந்துள்ளது. இதில் அனைத்து படங்களும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் அக்டோபர் மாதம் வெளியான அனைத்து திரைப்படங்களும் வசூலில் அசத்தியது. ஆனால் தீபாவளி முடிந்து அடுத்த வார வெளியீடாக வெளிவந்த ஆக்ஷன் மற்றும் சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தமிழ்சினிமாவின் தலையெழுத்து ஆக மாறியுள்ளது.

இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்துள்ளது. விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்சன் திரைப்படம்திரைக்கதையில் குழப்பத்தை கூட்டி ரசிகர்களை ஓட வைத்தது.

அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சங்கத்தமிழன் திரைப்படம் பார்த்து பார்த்து சலித்து போன திரைக்கதையை அப்படியே காட்சிகள் மாறாமல் எடுத்து ரசிகர்களை திரையரங்குகளை விட்டு வெறித்தனமாக ஓட வைத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top