வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 28 படங்கள்.. லக்கி பாஸ்கரை தட்டித் தூக்கிய நெட்ஃபிளிக்ஸ்

November 29 OTT Release Movies: ஓடிடியில் எப்போதுமே நிறைய படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் எக்கச்சக்க படங்கள் குவிந்து கிடக்கிறது. அதுவும் இத்தனை நாட்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த வகையில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‌ இப்படம் தியேட்டரில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சமீபத்தில் வெளியான ஜெயம் ரவியின் பிரதர் படம் ஜீ 5 ஓடிடியில் வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான பிளடி பக்கர் படம் தியேட்டரில் சரியாக போகவில்லை. இந்த சூழலில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம்ங் ஆகி இருக்கிறது. மேலும் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் தமிழ் ரீமேக் காண SshHh படம் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஓடிடிக்கு வந்த துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர்

விக்ராந்த் நடிப்பில் உருவான தீபாவளி போனஸ் படமும் இதே ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது. மேலும் ஹாட் ஸ்டாரில் வெப் சீரிஸ் ஆன பாராசூட் வருகின்ற 29ஆம் தேதி வெளியாகிறது. மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த படம் தான் லக்கி பாஸ்கர்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த படம் தியேட்டரில் வசூலை வாரி குவித்தது. இப்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை தட்டி தூக்கி இருக்கிறது. மேலும் தெலுங்கில் கா, விகடகவி போன்ற படங்களும் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

ஹாட் ஸ்டாரில் சுனாமி என்ற ஆங்கில வெப் சீரிஸ் ஸ்ட்ரீமாகிறது. மேலும் நெட்பிளிக்ஸில் அவர் லிட்டில் சீக்ரெட் படம் வெளியாகிறது. இவ்வாறு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்கள் ஓடிடியில் இந்த வாரம் ரசிகர்களை மகிழ்விக்க வெளியாகி உள்ளது.

- Advertisement -

Trending News