பீகாரின் பிரபல கொள்ளையன் பிடிபட உதவிய நயன்தாரா ! எப்படி தெரியுமா ? - Cinemapettai
Connect with us

Cinemapettai

பீகாரின் பிரபல கொள்ளையன் பிடிபட உதவிய நயன்தாரா ! எப்படி தெரியுமா ?

nayanthara stills

News | செய்திகள்

பீகாரின் பிரபல கொள்ளையன் பிடிபட உதவிய நயன்தாரா ! எப்படி தெரியுமா ?

திருடு போன செல் போன், காங்ஸ்டர் ஒருவன், நயன்தாராவின் போட்டோ, சாதுர்யமான பெண் போலீஸ். இந்த நான்கு விஷயங்களையும் இணைத்தால், நமக்கு சினிமா படத்தின் கதை வரும் என்று சொன்னால் நம்புவீர்கள், ஆனால் ஒரு கொடூர கொள்ளையனை போலீஸ் கைது செய்தது என்றால் நம்புவீர்களா ? வேறு வழி இல்லை நமபி தான் ஆக வேண்டும். இதோ அந்த சம்பவ விவரம் பின்  வருமாறு.

Nayanthara-Dora-Cutout

பீகாரின் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தர்பங்கா மாவட்டம். அங்கு பாரதிய ஜனதா தலைவர் சஞ்சய் குமார் மகோதன் என்பவரின் விலை உயர்ந்த மொபைல் ஒன்று திருட்டு போனது .இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த கேசின் பொறுப்பு அசிஸ்டன்ட் சப் – இன்ஸ்பெக்டர் மதுபாலா தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருடப்பட்ட மொபைலின் அழைப்பு விவர பதிவுகளின் ஆய்வுக்கு பின் முகம்மது ஹஸ்னைன் என்பவன் தான் அந்த மொபைல் போனை பயன்படுத்துவதாக போலீஸ் முடிவு செய்தனர். போலீசார் பல சந்தர்ப்பங்களில் முகம்மது ஹஸ்னைனை பிடிக்க முயற்சி செய்தனர், ஆனால் அவன் தப்பித்து கொண்டே இருந்துள்ளான்.

இதை தொடர்ந்து போலீஸ் பெண் அதிகாரி மதுபாலா தேவி அவனை திட்டம் போட்டு பிடிக்க எண்ணினார். இதனால் அவனை காதலிப்பதாக சொல்லி அடிக்கடி மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.  முதலில் அவன் அதனை ஏற்று கொள்ள வில்லை, ஆனால் நாளடைவில் அவன் இவரின் காதல் வலையில் வீழ்ந்தான்.

Nayanthara-Doraஇந்நிலையில் அந்த பிரபல கொள்ளையன் போட்டோ அனுப்புமாறு கேட்டுள்ளான். ஆனால் மதுபாலா தனது வாட்ஸ் ஆப்   புரோபைல் போட்டோவாக  நடிகை நயந்தாராவின்  படத்தை வைத்து இருந்தார். அதனையே அவனுக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

nayanthara

அந்த புகைப்படத்தை பார்த்த பரவசமடைந்து   அவன் காதல் முத்தி  பைத்தியமானான். டர்பங்கா நகரத்தில் ஒரு இடத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டான். குறிப்பிட்ட அந்நாளில் அந்த நேரத்திற்கு அங்கு வந்துள்ளான். பெண் போலீஸ் அதிகாரி ஒரு புர்க்காவை அணிந்து வந்த காரணத்தால் ஹஸ்னைன் அவரை அடையாளம் காணத் தவறி விட்டான்.அந்த இடத்தில இருந்த மற்ற போலீஸ் அவனை உடனடியாக  கைது செய்தனர்.

முகம்மது ஹஸ்னைன் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். எனினும் அந்த போனை  மற்றொரு கிரிமினலிடமிருந்து 4,500 ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறியுள்ளான். அந்த தகவலைப் பயன்படுத்தி, அந்த ஒரிஜினல் குற்றவாளிகளையும்  போலீசார் விரைவில் கைது செய்து விட்டனர்.

சாதுர்யமாக செயல்பட்ட மதுபாலா தேவியின் புத்தி  கூர்மையை பாராட்டி பீகார் போலீஸ் அவருக்கு   வெகுமதி அறிவித்துள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top