தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து விஷால் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ள விஷால், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இவர் தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். நடிகர் சங்கம் தேர்தல் போன்று வரவிருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் களமிறங்க உள்ளார். இது தயாரிப்பாளர் சங்கத்திற்குள் புதிய சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிகம் படித்தவை:  விஷால் செயலால் கடுப்பான சிம்பு ரசிகர்கள் ?

இந்நிலையில் இருவாரங்களுக்கு முன்னர் கூடிய தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், விஷாலை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் வகையில் விஷால் நடந்து கொண்டதால் அவரை நீக்குவதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்தது.

அதிகம் படித்தவை:  இந்த வம்பே வேண்டாம். விஜய்யுடன் மோதுவதை தவிர்த்த விஷால்!

இதனிடையே தன்னை நீக்கியதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் வழக்கு தொடர்ந்தார். இந்த விழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கோர்ட், விஷாலை நீக்கியது குறித்து ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வழக்கை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.