வீட்டை காலிசெய்.! பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ்.. தன்னோட பசுமாடுகளுடன் வெளியேறுகிறார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். அவருடன் பசுமாடுகளையும் வளர்த்து வந்தார்.

இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் வீட்டை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் தான் வளர்த்து வந்த 5 பசுமாடுகள் மற்றும் 1 காளை மாட்டை என்ன செய்வது என்று யோசித்து வந்தார்.

இதனையடுத்து தனது வீட்டுக்கு ஆதரவாளர்கள் அடிக்கடி வந்து செல்பவர்களிடம் பசுமாட்டை எடுத்துச்செல்லுங்கள் என்று கண் கலங்கியபடி கூறியுள்ளார்.

மேலும், காளை மாட்டை மட்டும் தன்னோடு வைத்துக்கொள்ள ஆசை பட்டுள்ளார். இதனால் காளையை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Comments

comments