fbpx
Connect with us

தினமும் என்னை கவனி – முதல்வரின் அதிரடி

News | செய்திகள்

தினமும் என்னை கவனி – முதல்வரின் அதிரடி

சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுக்கா சிலுவம்பாளயம் கிராமத்தில் பிறந்த நம்ம முதல்வர் திரு. பழனிச்சாமி அவர்கள் தன்னோட சொந்த ஊர்ல நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுல பங்கேற்றார்.

அந்த விழாவின்போது அவர் சொன்னது என்னானா

“நான் முதலமைச்சராக இருந்தாலும் என்னோட அன்றாட வேளைகளில் எந்த மாற்றமும் இருக்காது, நானும் மக்களில் ஒருவன்தான்.

மக்கள் தங்களுடைய குறைகளை கூற எந்த நேரத்திலும், எந்த தடையுமின்றி என்னை சந்திக்கலாம்.

தினமும் இரண்டு முறை உங்களை சந்தித்து மனு பெறுவதற்காக நான் காத்திருக்கிறேன்.” என்று சொன்னார்.

மேலும் நஷ்டத்தில் நடந்துகொண்டிருக்கும் அம்மா உணவகத்தை மூடிவிடும் முடிவு ஏதாவது உண்டா என்று கேட்டபோது

“இது அம்மா அவர்கள் ஏழைகளின் பசியை போக்க ஆரம்பித்த உன்னத திட்டம், இது நஷ்டமடைந்தாலும் அன்றாடம் வயிறார உண்ணும் மக்களுக்காக இது தடையின்றி நடத்தப்படும்” என்றார்.

நீட் தேர்வினை பற்றிய கேள்வி வினவியபோது

“நம் மாநில அரசின் சார்பில் நீட் தேர்வு குறித்து பிரதமரிடம் இரண்டு முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் இறுதிப் பரிசீலனை முடிவிற்காக காத்துள்ளோம்.” என்று கூறினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உண்மையா இவரு நல்லவரா? கெட்டவரா?

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top