Reviews | விமர்சனங்கள்
நோட்டா திரை விமர்சனம்.!
அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தின் மூலம் புகழ் பெற்றவர் விஜய் தேவாரகொண்டா, இந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார், இந்த நிலையில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலும் நல்ல வசூல் ஆனது.

NOTA vijay devarkonda
இந்த நிலையில் இவர் முதன்முதலில் தமிழில் அறிமுகமாகும் திரைப்படம் நோட்டா, என்று இந்த திரைப்படம் திரையரங்கிற்கு வந்துள்ளது, ரசிகர்களை கவர்ந்ததா என்று இப்போது பார்ப்போம்.
படத்தில் நாசர் தமிழகத்தின் முதல்வராக நடித்திருப்பார் அவரின் பையன்தான் தான் விஜய் தேவரகொண்டா, ஒரு நிலை அவர் மீது ஒரு வழக்கு விடுகிறது அதனால் இரண்டு வாரத்திற்கு மட்டும் டம்மி முதல்வராக, நாசர் மகன் விஜய் தேவரகொண்டா பதவி ஏற்கிறார், ஆனால் இதற்கு அரசியல் பற்றி எதுவுமே தெரியாது அரசியல் அ,ஆ தெரியாது. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐந்து ஆண்டுகள் தண்டனை கொடுக்கிறார்கள்.

NOTA
இந்த ஐந்து ஆண்டும்விஜய் தேவரகொண்டா தான் முதலமைச்சர் , இந்த ஐந்து ஆண்டும் முதலமைச்சராக இருந்துகொண்டு அரசியல் ஆட்டமும் மாற்றமும் என்ன என்பதுதான் படத்தின் கதை. விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் என்று யாராலும் கூறிவிட முடியாது ஏனென்றால் அவ்வளவு சூப்பராக டப்பிங் செய்துள்ளார், படத்தில் தனக்கே உரித்தானஅடாவடி ஸ்டைலில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
தற்போது தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசியல் நிலைப்பாடுகளையும் பிரச்சனைகளையும் அப்படி திரைப்படமாக மாற்றியுள்ளார்கள் வாரிசு அரசியல், குனிந்து கும்பிடு போடும் அரசியல், செம்பரம்பாக்கம் ஏறி திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம், தற்போது இருக்கும் அரசியலை நம் கண் முன்னே கொண்டு வருகிறார்கள். ரசிகர்களும் ரசிகர்கள் இதில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடுவதை எவ்ளோ சுலபமாக முடிக்கலாம் என்பதை மிக அழகாக காட்டி உள்ளார்கள் படத்தில்.
படத்தில் எதோ செயற்கை தனம் இருக்கிறது அது தெலுங்கு பட ஹீரோ நடித்ததால் தான் தெரிகிறதோ என்னமோ, மேலும் பல இடங்களில் லாகி மீறல் இருக்கிறது, அதுவும் பினாமி பணத்தை எடுக்கும் காட்சி கொஞ்சம் பூ சுத்துவது போல் இருக்கிறது படத்தில் பல இடங்களில் இசை தான் தாங்கி பிடிகிறது சாமின் இசை. கிளைமேக்ஸ் வலுவானதாக அமையவில்லை, தன்னால் முடிந்த அளவிற்கு எதார்த்தமாக காட்ட முயன்றுள்ளார் ஒளிபதிவாளர், மொத்தத்தில் நோட்டா கொஞ்சம் தடுமாற்றம் அரசியல் தான்.
நோட்டா : 2.75/5
