Tamil Cinema News | சினிமா செய்திகள்
நோட்டா படத்தின் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா.!
விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் நோட்டா இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக உருவாக்கப்பட்டது, விஜய் தேவார கொண்டா தெலுங்கு நடிகராக இருந்தாலும் இவர் நடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

NOTA
இவர் முதன் முதலாக நடிக்கும் தமிழ் திரைப்படம் தான் நோட்டா தற்போது இந்த திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது தமிழ்நாடு முழுவதும் திரையிடப்பட்ட இந்த திரைப்படத்தின் வசூல் இதுவரை 2.6 கோடிகள் வசூலித்துள்ளது.
இவர் நடித்த முதல் தமிழ் படம் இவ்வளவு வசூல் ஆகியுள்ளதால் இந்த திரைப்படத்தை வெற்றிப்படமாக தான் அனைவரும் பார்க்கிறார்கள், 96, ராட்சசன், ஆகிய தமிழ் படங்களுடன் வெளியானாலும், இந்தத் திரைப்படம் இவ்வளவு வசூல் ஆனது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
