fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சன்டிவி பிரபலம் கண்மணி நடிப்பில் மிரட்டலாக வெளிவந்துள்ள நாட் ரீச்சபிள் டீசர்.. எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கதாபாத்திரம்

kanmani-suntv

Videos | வீடியோக்கள்

சன்டிவி பிரபலம் கண்மணி நடிப்பில் மிரட்டலாக வெளிவந்துள்ள நாட் ரீச்சபிள் டீசர்.. எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள கதாபாத்திரம்

தமிழ் திரையுலகம் எத்தனை புகழ் பெற்றதோ அதற்கு ஓரளவு நிகரான புகழ் பெற்றது தான் தமிழ் சின்னத்திரையும் ரசிகர்களின் பார்வை இப்போதோ சீரியல் நடிகைகள் ரியாலிட்டி ஷோ போட்டியாளர்களை கடந்து செய்தி வாசிப்பாளர்களையும் ரசிக்க வைக்கிறது.

ஏறகனவே புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் டிரண்டிங்கில் பெருவாரியக பேசப்பட்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான வாய்ப்பும் கிடைத்தது. அவரைப்போலவே சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கண்மணி சேகர்.

சமீபத்தில் வெளியான கட் ஆஃப் வீடியோவால் நெட்டிசன்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டவர் கண்மணி சேகர். இப்போது ஒரு படவாய்ப்பும் கிடைத்துள்ளது. நாட்ரீச்சபிள் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார் கண்மணி.

இதில் நாயகனாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் டேவிட் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

படத்தின் கதைக்கருவை பொறுத்தவரை தனியாக கால் டாக்சியில் பயணித்த பெண் காணாமல் போகிறாள் “காவலன் SOS” செயலியின் வாயிலாக அந்த பெண் எப்படி கண்டுபிடிக்கப்படுகிறார். காப்பாற்றப்பட்டாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

சந்துரு முருகானந்தம் என்கிறவர் இப்படத்தின் இயக்கம் எடிட்டிங் மற்றும் VFX பணிகளை செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top