India | இந்தியா
இனி தேர்வில் தலைகீழா நின்னாலும் காப்பி,பிட் அடிக்க முடியாது.. அடேங்கப்பா என்ன ஒரு புத்திசாலித்தனம்
பள்ளி பருவத்தை விட கல்லூரிகளில் படிப்பின் ஆர்வம் மாணவர்களுக்கு குறைந்துவிடும். அதனால் அவர்கள் தேர்வின்போது காப்பியடிப்பது, பிட்டு அடிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது வாடிக்கைதான்.
செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக சில ஆசிரியர்கள் இதனை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தற்போது கர்நாடகாவில் உள்ள Bhagat யுனிவர்சிட்டி கல்லூரியில் நூதனமாக தேர்வு நடைபெற்று உள்ளது.
அதாவது தலையில் அட்ட பாக்ஸை மாட்டிக் கொண்டு அருகில் உள்ள மாணவர்களை திரும்பி பார்க்க முடியாத அளவிற்கு தேர்வு நடைபெற்று உள்ளது. இதனை பார்த்து மற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதித்தால் மாணவர்களுக்கு தேர்வின் போது பயம் இன்னும் அதிகரிக்கும் தவிர இது போன்ற தவறுகளை தடுப்பது நியாயமான முறை அல்ல.
இந்த கல்லூரியில் உள்ள மாணவர்கள் திரும்பத் திரும்ப தேர்வின் போது தவறுகள் செய்வதால் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

exam

exam

exam
