பிரபல நடிகை கல்யாணம் ஆகவில்லை, ஆனால் கர்ப்பமா.??

சினிமா உலகில் நடிகைகள் பற்றிய வதந்தி வருவது வழக்கமாக உள்ளது இதுபோல் ஒரு செய்தி எப்போழுதாவதுதான் வரும்.பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி திருமணமாகாமல் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இதை பார்த்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நர்கிஸ் ஃபக்ரி. ராக்ஸ்டார் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பிரசாந்தின் சாகசம் படத்தில் கவுரவ தோற்றத்தில் வந்தார்.மாடலான அவரின் சினிமா வாழ்க்கை பெரிதாக பிக்கப் ஆகவில்லை.

விமான நிலையத்தில் கையை வைத்து முகத்தை மூடியபடி சென்றார் நர்கிஸ். அவரது வயிறு பெரிதாக தெரிந்ததால் அவர் கர்ப்பம் என்ற செய்தி தீயாக பரவியது.

கர்ப்ப வதந்தி குறித்து அறிந்த நர்கிஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் கர்ப்பமாக இல்லை. ஹாம்பர்கர் சாப்பிட்டதால் அப்படி இருந்திருக்கும் என்று ஜோக்கடித்துள்ளார்.தனது கர்ப்ப வதந்தி குறித்து நர்கிஸ் ட்விட்டரில் பிரேக்கிங் நியூஸ் போட்டு ஜோக்கடித்துள்ளார்.

நர்கிஸ் பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ராவை காதலித்தார். அவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று எதிர்பார்த்தபோது பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments