fbpx
Connect with us

பிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது கிடைக்காமல் செய்தது யார் ? ரசிகர்கள் கோபம்

பிரேமம் படத்துக்கு கேரள அரசு விருது கிடைக்காமல் செய்தது யார் ? ரசிகர்கள் கோபம்

premamகேரள அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான “மாநில திரைப்பட விருதுகள்” இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விருதுகளை திரைப்படத்துறை அமைச்சர் திருவாங்கூர் ராதாகிருஷ்ணன் திருவனந்தபுரத்தில் வெளியிட்டார்.

சிறந்த நடிகராக துல்கர் சல்மான் மற்றும் சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.சார்லி படம் எட்டு விருதுகளைத் தட்டிச்சென்றுள்ளது

ஆனால் கேரளத் திரையுலகின் பல்வேறு சாதனைகளை முறியடித்த, 200 நாட்களுக்கு மேல் ஓடிய திரைப்படமான பிரேமம் படத்துக்கு ஒரு விருது கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் மற்ற பல்வேறு விருதுகளில் கூட சிறந்த படத்திற்கான விருதைப் பெற்ற பிரேமம், கேரள அரசு விருதில் ஒரு விருதைக் கூட பெறாதது, அங்குள்ள ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேறு ஏதும் அரசியல் சூழ்ச்சியாக கூட இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top