ஹீரோவாக சாதிக்க முடியாமல் வில்லனாக மாறிய 5 நடிகர்கள்.. தவிர்க்க முடியாத வில்லனாக மாறிய வினய்

பொதுவாக சினிமாவில் ஹீரோ கனவோடு களமிறங்கும் நடிகர்கள் பலருக்கும் அந்தக் கனவு நனவாகி விடாது. சிலர் ஹீரோவாக ஜெயித்தாலும் பலருக்கு அந்த வாய்ப்பு கை கொடுக்காமல் போய்விடும். அதில் அருண் விஜய், ஜெயம் ரவி போன்ற சிலர் எப்படியாவது வெற்றியை கொடுத்து முன்னணி நடிகர் ஆகிவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அதெல்லாம் சரிவராது என்று புரிந்துகொண்ட சில நடிகர்கள் தற்போது கொடூர வில்லனாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி ஹீரோ வேஷம் வொர்க் அவுட் ஆகாமல் வில்லனாகவே மாறிய 5 நடிகர்களை பற்றி இங்கு காண்போம்.

வினய்: உன்னாலே உன்னாலே என்ற திரைப்படத்தின் மூலம் காதல் ஹீரோவாக அறிமுகமான இவர் அதன்பிறகு ஜெயம் கொண்டான், அரண்மனை போன்ற திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் அவருக்கு ஹீரோ வாய்ப்பு சரிவர வராத காரணத்தினால் தற்போது வில்லனாக களம் இறங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹிட்டடித்த டாக்டர் திரைப்படத்தின் மூலம் வினய் வில்லனாக மாறினார். அதை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன், ஓ மை டாக் போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். அலட்டல் இல்லாத இவருடைய வில்லத்தனம் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. தற்போது இவர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு வில்லனாக உருவெடுத்துள்ளார்.

பிரசன்னா: பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் பல தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அவருக்கு பெயர் சொல்லும் அளவுக்கு எந்த படங்களும் அமையவில்லை. அதனால் அவர் அஞ்சாதே என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தார்.

அதன்பிறகு புலி வால் என்றnதிரைப்படத்திலும் வில்லன் ரோலில் மிரட்டினார். தற்போது அதிக பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவர் செகண்ட் ஹீரோ, வில்லன் போன்ற கேரக்டர்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

சிபிராஜ்: தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக கலக்கிய நடிகர் சத்யராஜின் மகன் என்ற அடையாளத்தோடு ஹீரோவாக நடித்தவர் சிபிராஜ். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு ஹீரோ சான்ஸ் கிடைக்கவில்லை.

அதனால் இவர் நாணயம், போக்கிரி ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்தார். வில்லனிலிருந்து ஹீரோவாக மாறிய அவருடைய அப்பாவிற்கு நேர்மாறாக இவர் தற்போது ஹீரோவிலிருந்து வில்லனாக மாறி இருக்கிறார்.

பாபி சிம்ஹா: தமிழ் சினிமாவில் டபுள் ஹீரோ கதைகளில் அதிகமாக நடித்திருக்கும் இவர் தற்போது வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த சாமி 2, பேட்டை, மகான் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ஹீரோவாக ரசிகர்களை கவர முடியாமல் இருந்த இவருக்கு வில்லன் வேடம் நன்றாக ஒர்க் அவுட் ஆகி வருகிறது.

டேனியல் பாலாஜி: சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த இவர் ஒரு சிலர் கேரக்டர்களில் நடித்து இருந்தாலும் அவை எதுவும் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் வில்லன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் போன்ற பல திரைப்படங்களில் கொடூர வில்லனாக மிரட்டியிருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய வில்லனாக இருக்கிறார்.

Next Story

- Advertisement -