kamal-norwayகடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நோர்வே விருது விழா நடந்து வருகின்றது.

7வது ஆண்டான இந்த வருடம் மிகப்பிரமாண்டமாக நடக்கவிருக்கின்றது.இவ்விருது விழாவில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.

விழாவில் மிகப்பெரும் கௌரவமாக உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் – தமிழர் விருதினையும், தலைசிறந்த “கலைச்சிகரம்- தமிழர் ” விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.