வடகொரியாவில் கடந்த சனிக்கிழமை அன்று அதிபரான கிம் யோன் -அன்னின் தாத்தா Kim Il-Sung-வின் பிறந்த நாள் விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவில் வட கொரியாவை சேர்ந்த ராணுவப்படையினர் தங்களது அணி வகுப்பினை நடத்தினர்.

அப்போது வடகொரியாவின் இராணுவ வாகனங்களான பீரங்கிகள் அணி வகுப்பில் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஒரு பீரங்கி அணி வகுப்பிலிருந்து விலகியது.

அதிகம் படித்தவை:  2ஜி வழக்கு தீர்ப்பு - நடிகர் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய ட்வீட் இது தான் !

அது ஏதோ தொழில் நுட்ப கோளாறு காரணாமாக விலகியுள்ளது. அந்த பீரங்கியிலிருந்து புகைகள் வந்த படி இருந்தன. இந்நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

வலிமையான இராணுவத்தை தாங்கள் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா எங்கள் மீது போர் தொடுத்தால், நாங்களும் அவர்கள் மீது போர் தொடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்து வந்த வடகொரியாவின் இராணுவம் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  சாலை ஓரங்களில் ரசிகனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் சிம்பு!

வலிமையான அணு ஆயுதங்கள் மற்றும் வடகொரியாவின் அணு தொழிற்சாலைகளை அழிப்பதற்கு 14,000 கிலோ எடை கொண்டு மெகா அணுகுண்டு என தன்னை வலிமையானவனாய் தயார்படுத்தி வரும் அமெரிக்கா மத்தியில், வடகொரியாவின் தற்போதைய இராணுவத்தின் நிலை மிகவும் பின் தங்கியுள்ளதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவிடம் போரிட்டால், வடகொரியா சமாளிக்குமா என்பது கடினம் எனவும் தெரிவித்துள்ளது.