Tamil Cinema News | சினிமா செய்திகள்
பொறி வச்சு புடிச்ச பிக் பாஸ், இந்த வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.! நாங்க செவனேன்னு தானே இருந்தோம்!
விஜய் டிவியின் டிஆர்பியை தூக்கி நிறுத்தும் தூணாக தற்போது அந்த சேனலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 4. இந்த நிகழ்ச்சி அனுதினமும் தன்னுடைய சுவாரஸ்யத்தை கூட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற விட்டு வருகிறது.
மேலும் வாரவாரம் திங்கட்கிழமையானவே பிக்பாஸ் செய்ற முதல் வேலையே நாமினேஷன் ப்ராசஸ் தான். அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான நேற்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. ஆனால் மற்ற நாமினேஷன்களைக் காட்டிலும் இந்த வாரம் சற்று மாறுபட்டதாகவே இருந்தது.
ஏனென்றால் இந்த முறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் படி, கால் சென்டர் டாஸ்க்கின் மூலம் போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் இந்த வாரம் நாமினேஷன்னுகாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர் என்று பார்த்தால் ஆரி, பாலா, அர்ச்சனா, நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி.
ஆனால் ஆரி, பாலா, அர்ச்சனா ஆகிய மூவரும் கால் சென்டர் டாஸ்க்கில் சிறப்பாக விளையாடி முதல் மூன்று இடங்களை பிடித்ததால், பிக் பாஸ் ஆல் சேவ் செய்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் அம்மூவருக்கும் பதிலாக வீட்டிலுள்ள நாமினேட் ஆகாத நபர்களில் இருந்து மூவரை தேர்வு செய்ய சொன்னார் பிக் பாஸ்.
இதனால் செவனேன்னு வீட்டுக்குள்ள சேவ் ஆகியிருந்த சோம் சேகர், கேப்ரில்லா, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் மாட்டிக்கொண்டனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன்னுகாக சோம், நிஷா, ரமேஷ், ஷிவானி, ரம்யா, கேபி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவர்களிலிருந்து யார் இந்த வார இறுதியில் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
