சிம்பு பற்றி கோலிவுட்டில் ஏதாவது ஒரு கிசுகிசு கசிந்துகொண்டுதான் இருக்கிறது. இவர் படப்பிடிப்புக்கு சரியாக வரமாட்டார் எனறு ஒரு பக்கம் கிசுகிசு கிளப்பிவிட்டாலும், உடன் நடிக்கும் நடிகைகளை வைத்தும் சிலர் கிசுகிசுக்களை கிளப்பி விடுவது வாடிக்கையாடி விட்டது.

அதன்படிதான் தற்போது அவரைப் பற்றிய ஒரு கிசுகிசு தற்போது கோலிவுட்டில் தீயாக பரவி வருகிறது. அதாவது, போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வரலக்ஷ்மியும் சிம்புவும் தற்போது நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

வரலக்ஷ்மி ஏற்கெனவே விஷாலுடன் நெருக்கம் காட்டி வந்தார். சமீபத்தில் அவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரை பிரிந்து சிம்பு நடிகருடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்பு, வரலக்ஷ்மி எந்த விழாக்களுக்கும் சேர்ந்தே போகிறார்களாம். தினமும் ஒருமுறையாவது நேரில் சந்தித்துக் கொள்கிறார்களாம்.

இவர்களுக்கு ஆதரவாக சில முன்னணி நடிகைகளும் களம் இறங்கியிருக்கிறார்களாம். இந்த ஜோடி நிஜ வாழ்க்கையிலும் இணையலாம் என்றும் பேச்சு அடிபடுகிறதாம். இதையெல்லாம் கேள்விப்பட்ட விஷால் தற்போது மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாராம். ஏற்கெனவே, சிம்பு மீது கோபத்தில் இருக்கும் விஷால் இந்த செய்தி மேலும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளதாம்.