தளபதி வழியை விடுத்து சூப்பர்ஸ்டாரை பின்பற்ற நடிகர் சிவகார்த்திகேயன் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். ஸ்பாட் டைம் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர். மொக்க நிகழ்ச்சியை கூட சிவா தொகுத்து வழங்கினால் சூப்பர் ஹிட் என்ற எழுதப்படாத விதியையே உருவாக்கினார். எதிர்நீச்சல் படத்தில் தனுஷால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டவர். தொடர்ந்து, பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார். சினிமாவில் அறிமுகமானதில் இருந்து சிவகார்த்திகேயன் விஜயின் ரூட்டிலே குழந்தைகளை மகிழ்வித்து ரசிகர்களாக்கி வந்தார். இது சிவகார்த்திகேயனின் கேரியரில் பெரும் முன்னேற்றமாக அமைந்தது.

சமீபத்தில், வேலைக்காரன் படத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார். என் மகளுக்கு ஜங்க் உணவுகளை கொடுக்க மாட்டேன். அதனால், மற்ற குழந்தைகளை சாப்பிட சொல்லவே மாட்டேன் என அதிரடி ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். பல படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது சிவா மனசுல சக்தி படத்தின் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடிக்க இருக்கிறார். ராஜேஷ் படம் என்றாலே காதலை விட காமெடி தூக்கலாகவே இருக்கும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பூ நடிப்பில் வெளியான மன்னன் படத்தின் தழுவலாக இருக்கும் இப்படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில், விஜயசாந்தி வேடத்தை நயன் ஏற்க இருப்பதால் சிவாவிற்கும், அவருக்கும் படத்தில் கடும் மோதல் காமெடியாக படமாக்கப்படலாம் என தெரிகிறது. இப்படம் ரஜினி திரை வாழ்வில் வரவேற்பை பெற்ற படம் என்பதால் சிவாவிற்கும் இப்படம் நல்ல வரவேற்பை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 50 நாட்கள் படமாக்கப்பட இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.