Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழ் சினிமாவில் இதுவரை தம் அடிக்காத நடிகர்கள் இந்த ரெண்டு பேருதான்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் அவ்வளவு அழகு ஒன்றும் இல்லை என்றாலும் தங்களது வித்தியாசமான ஆக்சன், ஸ்டைலினாலே உச்ச நடிகர்களாக பலர் உயர்ந்து நிற்கின்றனர்.
சூப்பர் ஸ்டார், சிகரெட் சுழற்றி கையில் பிடிக்கும் காட்சியே தனி ஸ்டைல், அதே போன்று தளபதி, தல என பலரும் தங்களுக்கு என ஒரு ஸ்டைலை வகுத்துள்ளனர்.
ஏனென்றால் ரசிகர்கள் படத்தில் பார்க்கிற நடிகர் நடிகைகள் செய்கின்ற வித்தியாசமான செயல்களை எல்லாம், அப்படியே தங்களது வாழ்க்கையில் பின்பற்றுவதும் உண்டு.
அதில் நல்ல விஷயமாக என்றால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். அதே தீய விஷயமாக இருந்தால் யார் பொறுப்பேற்பது என்பதுதான் கேள்வி.
அந்த வகையில் முன்னணி பிரபலங்கள் பலரும் தங்கள் படத்தில் ஸ்டைலாக சிகரெட் பிடித்து, விதவிதமான வடிவத்தில் புகைவிடுவது போன்ற காட்சிகளை சர்வசாதாரணமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
இதேபோன்று ஆண்களை எல்லாம் மிஞ்சி கொஞ்சம் பெண்களும் தண்ணி அடிக்கும் காட்சில்லாம் இப்போ வழக்கமாகி விட்டது.
ஆனால் இந்த காலத்திலும் தங்கள் படங்களில் இதுவரை சிகரெட் பிடித்து கெத்து காட்காத நடிகர்கள் யார் என்றால் கார்த்திக் மற்றும் சிவகார்த்திகேயன் மட்டும் தான். இவர்கள் இதுவரை தங்கள் படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை தவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தில் முன்மாதிரியாக இருக்கும் இவர்களின் கொள்கையை கடைசிவரை கடைபிடித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.
