காசி தியேட்டர்:

சென்னையில் உள்ள மிக முக்கிய திரை அரங்குகளில் காசி தியேட்டர்ரும் ஒன்று.படம் நல்ல இருக்கா இல்லையானு தெரிஞ்சுக்கனும்னா இங்க முதல் ஷோ பார்த்துவிட்டு வரும் ரசிகர்களின் முகங்களை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம். ரெகுலராக பல சினிமா விரும்பிகள் படம் பார்க்க செல்லும் இடம்.விடியற்காலை நான்கு மணிக்கே ரசிகர்களுக்காக ஸ்பெஷல் ஷோ போடும் தியேட்டர் களில் இதுவும் முக்கியமான  ஒரு தியேட்டர்.

விஷாலின் அதிரடி:

இனிமேல் தியேட்டர்களில் அம்மா குடிநீர் பாட்டில்தான் விற்கணும். அதுவும் அதே விலையில். அதுமட்டுமல்ல… அரசு நிர்ணயித்துள்ள டிக்கெட் ரேட்டான 20 ரூபாய், 50 ரூபாய், 70 ரூபாயை தாண்டி யாரும் டிக்கெட் விற்கக்கூடாது. ஆந்திர மாநிலத்தில் இருப்பது போல பார்க்கிங் கட்டணத்தை அறவே ஒழிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாத தியேட்டர்கள் மீது மக்கள் அருகிலிருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று அறிவித்திருக்கிறார்.

தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்றே புரியாத புதிராக தான் இன்று பணம் கொடுத்து பார்க்கும் சினிமா ரசிகரின் நிலை உள்ளது.

மெர்சல் தீபாவளி:

மெர்சல் படம் தீபாவளி அன்று  வருமா அல்லது நிறுத்தப்படுமா என்று பல குழப்பங்கள் சுற்றி வந்த நிலையில். இன்று ஆன்லைன் புக்கிங் தொடங்கியது. மரியாதை நிமித்தமாக இயக்குனர் அட்லீ, மற்றும் விஜய் சற்றுமுன் முதல்வரை சந்தித்து நன்றியும் தெரிவித்துவிட்டு வந்தனர்.

mersal

படம் கண்டிப்பாக தீபாவளி அன்று வரும் என்று தளபதியின் ரசிகர்கள் இன்றே போஸ்டர் அடிக்கும் வேலையில் இறங்கி விட்டனர்.

காசி  தியேட்டர் போர்க்கொடி:

சில மாதங்களுக்கு முன்பு தான்,  ரெனோவேட் செய்யப்பட்டு, புதிய சீட், 4 கே டால்பி அட்மோஸ் மற்றும் 3 டி தொழில்நுட்பம் என்று மெருகேற்றி இருந்தனர். இவ்வாறு மாற்றி அமைக்கப் பட்ட பின் வரும் முதல் பெஸ்டிவல் தடவை இது தான்.கடந்த சில நாட்களாகவே மெர்சல் அரசன் வாரான் என்று ஸ்டேட்டஸ் போடுவது, படம் ரிலீஸ் பற்றி கவுண்ட் டவுன் கொடுப்பது என்று தங்கள் பேஸ் புக், மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மெர்சல் பற்றி அப்டேட் வந்த வண்ணம் இருந்தது.

தீடீர் என்று, இன்று இரவு 10  மணிக்கு தங்கள் பேஸ் புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் ‘சில விதிமுறைகள் எங்களை திருப்த்தி படுத்தவில்லை, ஆதலால் இந்த தீபாவளி அன்று நாங்கள் மெர்சல் படத்தை திரையிட மாட்டோம்.வேறு  ஏதேனும் மாற்றம் இருந்தால் உங்களுக்கு சொல்கிறோம்.’  என்று அப்டேட் செய்தனர்.

இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். திரையரங்க உரிமையாளர்கள் சார்பில், தயாரிப்பாளர்களுக்கு எதிராக எடுத்து வைக்கும் முதல் அடி இதுவா? புக்கிங் ஓபன் செய்யாமல் இருக்கும் மற்ற  தியேட்டர் ஓனர்களும் இது போல் போர்க்கொடி தூக்குவார்களா? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.