fbpx
Connect with us

எந்த ரன் ரேட்டும் எனக்கு பிரச்னை இல்லை: தோனி தில் பதில்

ms-dhoni_cinemapettai

எந்த ரன் ரேட்டும் எனக்கு பிரச்னை இல்லை: தோனி தில் பதில்

சேஸ் செய்யும் போது ரன் ரேட் எவ்வளவு தேவை என்பது முக்கியமில்லை என்று மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் சோபிக்காத எம்.எஸ்.தோனி ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தன் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 34 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைத்தார்.

ஆட்டத்திற்குப்பின் பேசிய தோனி, “இது கடிமான சேஸ்தான். ஆனால், இது போன்ற பரபரப்பான ஆட்டங்களில் முக்கியமானது பதற்றமடையாமல் இருப்பதுதான்.” என்று கூறினார்.

மேலும், “மனோஜ் திவாரி அதிக பந்துகளை வீண்டிக்காமல் சிறப்பாக விளையாடிது மிகவும் கைகொடுத்தது. என்னைப் பொருத்தவரை எந்த ரன் ரேட்டும் அதிகம் என்று இல்லை. அது எதிரணியின் பந்துவீச்சு எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தது. 7,8,9,10 என்று ரன் ரேட் கூடிக்கொண்டே போனாலும் கவலையில்லை.” என்றும் தோனி தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top