அமைச்சர் தங்கமணி வீட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் சசிகலா ராஜினாமா செய்ததாக வெளியான செய்தி தவறானது, பொய் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் இதே கருத்தை தெரிவித்தார்.
அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டில் தனியாக கூட்டம் நடைபெறவில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார். அப்போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அங்கு இருந்தார்.