Connect with us

Cinemapettai

solar-car

India | இந்தியா

பெட்ரோல், டீசல் இல்லாமல் இயங்கும் புதிய கார்.. ஒரு தடவை ரீ-சார்ஜ் செய்தால் 725 கிமீ செல்லும்

பெட்ரோல், டீசல், மின்சாரம் என்று எதுவுமே இல்லாமல் இயங்கும் அடுத்த தலைமுறைக்கான கார் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த  காரின் முக்கிய அம்சம் என்னவென்றால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் சோலார் மூலம் இயங்க கூடியது.

நெதர்லாந்தில் உள்ள லைட் இயர் என்ற நிறுவனம் இதை தயாரித்து பெரும் சாதனை படைத்துள்ளது. சோலார் மூலம் பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும், ஒரு தடவை ரீ-சார்ஜ் செய்தால் 725 கிலோ மீட்டர் வரை செல்லும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கார்கள் செல்லும்போதே சூரிய ஒளியின் மூலம் தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து  கொள்ளவும் முடியும். ஒரு மணி நேரத்திற்கு 12 கிலோமீட்டர் செல்லும் அளவிற்கு ரீசார்ஜ் ஆகிவிடுமாம்.

இந்த காரில் 4 மின் மோட்டார்கள் உள்ளன, அதன் மூலம் 100 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடியதாகும்.  இது போன்று பல அம்சங்களைக் கொண்டு விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த காரின் விலையை கேட்டால் வாய்யைபிழந்து விடுவோம் 1,70,000 அமெரிக்க டாலருக்கு நிகரான தான். லைட் இயர் ஒன் என்று  பெயரிட்டுள்ள இந்த கார் ஆட்டோமொபைல் துறைகளில் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top