Tamil Nadu | தமிழ் நாடு
நோ பார்க்கிங்கில் நின்ற வண்டியை அடித்து நொறுக்கிய அராஜக போலீஸ்
சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வண்டியை போலீஸ் அடித்து உடைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை கடற்கரை சாலையில் போர் நினைவுச் சின்னம் எதிரில் சாலையோரம் ஒரு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது, அந்த வாகனம் ஒரு மாணவன் வாகனம், அந்த மாணவனை அழைத்து சிவப்பு நிற வண்டியில் வந்த போலீஸ் விசாரிக்கிறார்.
ஆனால் போலீஸ் வண்டியில் வந்த காவலர் ஒருவர் தனது காரில் இருக்கும் ரூல் தடியால் அந்த பைக்கை அடித்து நொறுக்குகிறார் முதலில் வண்டியின் பின்புறம் இருக்கும் இண்டிகேட்டர் லைட் என அனைத்தையும் உடைத்து விட்டு பின்பு வண்டியில் ஸ்பீடா மீட்டர் ஐயும் உடைக்கிறார்.
இதனை அந்த மாணவன் வண்டியில் அமர்ந்து இருக்கும் போலீசிடம் காண்பிக்க பின்பு இறங்கி வருகிறார், ஆனாலும் அந்த காவலர் வண்டியை அடித்து நொறுக்குவது நிறுத்தவில்லை, அந்த மாணவன் எந்த எதிர்ப்பும் காட்டாமல் வண்டி எடுக்க முயலுகிறார், இருப்பினும் அந்த காவலர் முன்புறம் இருக்கும் ஹெட்லைட்டை உடைக்கிறார். இதை அனைத்தையும் அந்த போலீஸ் வேடிக்கை பார்க்கிறார்.
இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட்டு விட்டார், இந்த விஷயம் காவல் ஆணையரிடம் செல்ல ஏ கே விஸ்வநாதன் உடனடியாக அவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அந்த இரண்டு போலீஸ்காரர்களின் ஒருவர் ஜீப் ஓட்டுநர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த மோகன் என்பதும், மற்றொருவர் எஸ்.எஸ்.ஐ ஹரிபாபு என்பதும் தெரியவந்துள்ளது.
