புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

வாய்ப்பில்ல ராஜா.. எதிரினா எதிரிதான் விஜய்க்கு போட்டியான சீமான்.. ஏன் இவ்வளவு கோபம் தெரியுமா?

சீமானுக்கும் விஜய்க்கும் இடையிலான மோதல் சம்பவத்துக்கான காரணம் பற்றி பிரபல சினிமா விமர்சகர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தவெக

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கான மாற்று கட்சியாக வெளிக்காட்டி இன்று வரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் இருக்கும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் தான் ஓட்டு வங்கி அதிகரித்தது. ஆனால் இன்னும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

அப்படியிருக்க விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு என் ஆதரவு உண்டு. என் தம்பி அவர் என்றெல்லாம் நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களில் கூறி வந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், ’’கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ்த்தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை., திராவிடமும், தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தமது கருத்து’’ என பேசியிருந்தார்.

விஜய்யின் கருத்துக்கு சீமான் ஆவேசம்

விஜயின் பேச்சு திராவிட கட்சிகளையும் பாஜகவை ஸ்டெட்ராக அட்டாக் செய்த மாதிரி நாம் தமிழர் கட்சியையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் அட்டாக் செய்ததாக அக்கட்சி தொண்டர்கள் விஜய்யை ட்ரொல் செய்து விமர்சித்து வந்தனர்.

இதற்கு சீமான், ’’சினிமாவில் பேசுவது போன்ற பஞ்ச் டயலாக் எல்லாம் இல்லை தம்பி இது. இது நெஞ்சு டயலாக் .எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தந்தையே வந்தாலும் எதிரிதான் அதில் தம்பியும் இல்லை, அண்ணனும் இல்லை’’ என்று தெரிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த மீடியாவிலும் அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

விஜய், சீமான் மோதல் பற்றி அந்தணன் கூறியதாவது:

இந்த நிலையில், விஜய் மீதான சீமானின் கோபம் குறித்து சினிமா விமர்சகர் அந்தணன் கூறியதாவது: ’’ சீமானின் பேச்சு அப்போது நன்றாக இருந்தது ஒரு காலத்தில். ஆனால் சமீப காலத்தில் ஏன் இப்படி பேசுகிறார் என்பது போலிருக்கும். நேற்றைய அவரது பேச்சு மொத்தக் கூட்டத்தையும் கட்டிப் போட்டது. விஜயின் கூட்டத்தில் ஒப்பிடும்போது நேற்றைய நாதக கூட்டம் பாதியளவு கூட இல்லை. ஆனால் யூடியூப்பில் சீமானின் பேச்சு வைராலாகி வருகிறது.

விஜய், சீமான் அண்ணன் தம்பியாக இருந்த நிலையில், தவெக மாநாட்டில் தன்னை விஜய் சீண்டியதால் அவரும் நேற்று கூட்டத்தில் அதற்குப் பதிலடி கொடுத்தார்.

இதற்குக் காரணம், சில ஆண்டுகளுக்கு முன் தன்னை இயக்குனராக நிலை நிறுத்த கதை, திரைக்கதை எழுதி அதுபற்றி, தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் சந்தித்து வந்தார். விஜய்யை சந்தித்து அவர் பகலவன் பட கதையைக் கூறியிருந்தார். இதைக் கேட்ட விஜயும் நாம் நிச்சயம் செய்வோம் என்று கூறியிருந்தார். ஆனால் விஜய் அதன் பிறகு தான் தனக்கு வேறு படங்களில் கமிட்மெண்ட் இருப்பதாகவும் கூறினார். ஆனால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறவில்லை. அப்படத்தை தாணு தயாரிப்பதாக இருந்ததால் பகலவன் பட பேச்சு போய்க்கொண்டிருந்தது.

இருப்பினும் விஜய்யிடம் இருந்து எந்த வித அழைப்பும் வராத நிலையில் சீமானும் ஏமாற்றம் அடைந்தார். சிறைக்குப் போய்விட்டு வந்த சீமானும் அரசியலில் பலம் பெற்றார். இதைக் காரணமாக வைத்தே விஜயும் அவருடன் படம் செய்யவில்லை. இத்தனை நாட்கள் தன்னை காக்க வைத்த விஜய் மீது சீமான் கோபம் கொள்ளவில்லை. கத்தி படத்திற்கு பிரச்சனை வந்தபோது, சீமான், என் தம்பி விஜய் படம் என்று கூறி பிரச்சனையில் இருந்து மீட்டு படம் வெளியாக உதவினார்.

இதற்கு பிரதியுபகாரமாக கட்சிக்கு பணம் தேவையென்றால் தருவதாக விஜய் கூறிய நிலையில், திருச்சி மாநாட்டிற்கு பணம் கேட்டு நாதக கட்சியினர் விஜய்யை அணுகியபோது ’’இதனால் எனக்கென்ன நன்மை’’ என அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு சீமானும் அதிர்ச்சியடைந்தார். அப்போதும் விஜய் மீது சீமான் கோபப்படவில்லை.

அதன்பின், இசிஆரில் விஜயும், சீமானும் காரில் அமர்ந்து கொண்டு பேசினார் அரசியல் பற்றி. அதன்பின், விஜயலட்சுமி விவகாரம் ஒரு பெண் சீமானை விமர்சித்தது இதெல்லாம் சீமானின் பெயரை டேமேஜ் ஆக்கிய நிலையில், விஜய் , இனிமேல் சீமானுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என நினைத்திருக்கலாம்.

விஜயின் தவெக முதல் மாநாட்டில் காசு கொடுக்காமல் கூட்டிய கூட்டத்தை பார்த்தும், தன்னை சீண்டி விட்டதை கேட்ட சீமான், இத்தனை நாள் பொறுத்த அவர் நேற்றைய மாநாட்டில் பொங்கி எழுத்து விஜய்யை கடுமையாக விமர்த்திருக்கிறார்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏன் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள்?

இந்த நிலையில், சீமானின் நாதகவும், விஜய்யின் தவெகவும் இனிமேல் கூட்டணி வைக்குமா? சீமானும் விஜய்யும் முன்பு போல சகோதரர்களாக பரிமளிப்பார்களா? என கேள்வி எழுந்துள்ள நிலையில், திராவிட கட்சிகளை ஒழிக்க வந்ததாக கூறிக் கொண்ட இருவரும் ஏன் தங்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள் என விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

Trending News